Header Ads



அமைச்சரவையில் நடந்தது என்ன..? ரொஷான் நீக்கத்திற்கு காரணம் இவைதானா..??


கிரிக்கெட் பிரச்சினையை தீர்ப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரின் அலுவலகத்துக்கு சென்றதுடன், இந்திய உயர் அதிகாரியிடம் பேசியது ஏன் என ரொஷான் ரணசிங்கவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.


நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பில் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


அத்துடன், மகாவலி காணி பகிர்வு அமைச்சராக சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் முன்மொழியப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏன் அவரது அரசியல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்றும் ஜனாதிபதி, ரணசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த இரண்டு கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளிக்கத் தவறியதன் காரணமாக அமைச்சரவை ஐக்கியத்தை சீர்குலைத்ததாக தெரிவித்து அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதத்தை ஜனாதிபதி, நேற்று கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TW


No comments

Powered by Blogger.