ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ள விளையாட்டமைச்சர்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால கட்டுப்பாட்டு குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுகளை நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது சட்டத்தரணியான ஜீ.ஜி.அருள்பிரகாசம் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் செயற்பாடுகளையும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
குறித்த இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரியே விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த சீராக்கல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Post a Comment