Header Ads



672 கோடி ரூபா வரியை செலுத்தாத 5 நிறுவனங்கள்


ஐந்து மதுபான நிறுவனங்கள் 672 கோடி ரூபாவுக்கும் அதிகமான வரித்தொகையை செலுத்தாதுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தை இன்று (07.11.2023) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கூறியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


“ஐந்து மதுபான நிறுவனங்களும் வரி செலுத்த தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் 3 சதவீத வரி மேலதிகமாக விதிக்கப்பட்டுள்ளதால் தாமதக் கட்டணமாக 400 கோடி ரூபா வசூலிக்கப்படவுள்ளது.


 வரி செலுத்தாமைக்காக அந்நிறுவனங்கள் மூடப்படுமானால் அரசுக்கு செலுத்தவேண்டிய வரித்தொகையை வசூலிக்க முடியாது. எனவே அந்நிறுவனங்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 29ஆம் திகதிவரை வரியை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திர காலம் நீடிக்கப்படமாட்டாது.


சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இம்முறையே மதுவரி மோசடியை தடுப்பதற்கு அதிக காலம் எடுத்துள்ளது. மதுபான போத்தல்களுக்கான ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்துவது ஒரு புரட்சிகரமான விடயமாகும் எனினும் அதில் சில சிக்கல்கள் உள்ளன.


சரியான முறையில் ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.