3 தேர்தல்களுக்காக எத்தனை பில்லியன், செலவாகப் போகிறது தெரியுமா..?
அதிபர்த் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை சமர்ப்பித்திருந்தது.
அதிபரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கும் ஒரு மாதத்திற்கும் முன்னதாக அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதன்படி அடுத்த வருடம் (2024) செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதிபரின் பதவிக்காலம் இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளதாகவும், அதற்கமைவாக அடுத்த வருடம் எந்த நேரத்திலும் தேசிய தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டபோது சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி அடுத்த ஆண்டு தேசிய தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 16855000 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு (2022) வாக்காளர் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் அதிகரித்துள்ளது.
Post a Comment