மீன் ஒவ்வாமையால் 30 பேர் பாதிப்பு
மீகொட பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் இன்று (06) வழங்கப்பட்ட பகலுணவு ஒவ்வாமை காரணமாக 30 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 17 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் 13 பேர் பாதுக்க மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மயக்கம், தலைவலி மற்றும் வாய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மதிய உணவில் இருந்த மீன் துண்டினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
Post a Comment