இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு 2 தரப்பினரை குற்றம் சுமத்தும் நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி காலத்தில் வரிகளை குறைக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு குறித்த இரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்ததாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தமது கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் இலங்கையின் பொருளாாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோல்வியை எதிர்நோக்கிய போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக பதிவாகியிருந்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன பொறுப்பு கூற வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில, கடந்த 2019 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அதிபராக பதவியேற்ற கோட்டபாய ராஜபக்ச தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப வரிகளை குறைத்திருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணை மூலம் தெரிவு செய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச வரிகளை குறைக்க நடவடிக்கை எடுத்தமை பொருளாதார நெருக்கடிக்கு காரணமென கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சியினர் எதன் அடிப்படையில் கோட்டாபயவின் ஆட்சி காலத்தை தவறான முறையில் வெளிக்காட்ட முயற்சிக்கிறாரர்கள் எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
யார் யாருக்கு வரியைக்குறைத்து இலாபத்தை பல ஆயிரம் மடங்காக ஊக்குவித்துக் கொடுத்தார் என்பதல்ல இங்குள்ள அடிப்படைப்பிரச்சினை. கடந்த 13 -14 ஆண்டுகளாக இலங்கையில் அபிவிருத்தி என்ற பெயரில் பெற்றுக் கொண்ட பில்லியன் கணக்கான டொலர்களுக்கு என்ன நேர்ந்தது. அவற்றால் எந்த பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அவற்றைச் சரியான செலவுகள், அவற்றால் நாடு அடைந்த இலாபங்கள் என்ன அவற்றால் பொதுமக்கள் எவ்வளவு நன்மையடைந்துள்ளனர், அந்தப்பணத்துக்கான போரன்ஸிக் பட்ஜட் ரிப்போர்ட்டை மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் சமர்ப்பித்தால் மாத்திரம் இந்த நாட்டு மக்கள் திருப்தியடைவார்கள். மத்திய வங்கியில் இலங்கையின் தேசிய சொத்தாகப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த பல பில்லியன் கணக்கான டொலர்கள், தங்கம் ஆகியவற்றுக்கு என்ன நேர்ந்தது. சிரிலங்கன் விமானம் மூலம் உகண்டாவுக்கு இரகசியமாக கொண்டு சென்ற கோடிக்கணக்கான டொலர்கள் எங்கிருந்து ஏன் உகண்டாவுககு கொண்டு சென்ற காரணம் யாது? அவை எங்கிருந்து களவாடப்பட்டன அவற்றுக்கு தற்போது என்ன நேர்ந்துள்ளது. புலிகளிடம் இருந்து களவாடப்பட்ட கோடான கோடி டொலர்கள் பெறுமதியான தங்கம் எங்கே? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு ராஜபக்ஷ குடும்பம் இந்த நாட்டுக்கு பதில்கூறியாக வேண்டும். அவற்றை எல்லாம் மறைத்துக் கொண்டு அடிக்கும் பம்மாத்துக் கதைகளைக் கேட்க இந்த நாட்டு மக்கள் உப்பே! எனக்கூறும் இனமல்ல என்பதை இந்த நாட்டு மக்கள் அடுத்த தேர்தலில் உரியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.
ReplyDelete