Header Ads



நீர்கொழும்பு கோட்டத்தில் தமிழ் மொழி மூலம் 25 மாணவர்கள் சித்தி


- Ismathul Rahuman -


   நீர்கொழும்பு கல்வி கோட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 25 மாணவர்கள் இம்முறை 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.


     விஜயரத்ணம் இந்து மத்திய கல்லூரியில் 14 மாணவர்களும், போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியில் 7 மாணவர்களும் அல் ஹிலால் தேசிய பாடசாலையில் 4 மாணவர்களுமாக 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


    விஜயரத்ணம் இந்து மத்திய கல்லூரியின் வீ. கரிணரம், வீ. ஜிரோஸ் ஆகிய இருவரும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் அதிகூடிய புள்ளியான தலா 178 புள்ளிகளை பெற்றுள்ளனர்.  


ஏனையவர்களான கே. சரவிந் 171, ஜீ. மிர்துஷ் 169, ஜீ. நதீஷ் 161, ஆர். சுவர்னிக்கா 160, வீ. கரினிசிரி 157, எம்.ஏ.கே. பாத்திமா அம்ரா 156,  டீ.டீ. கனேஷ் 153, கே. கனிஷ்க் 152, எஸ். சுரஜீவ் 150, ஏ. லீனா பிரனவி 150, ஆர்.திருக்ஷினி 150, பி. தர்வினிஷ் 149 என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்றுள்ளனர்.


    போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியின் எம்.ஆர். ஆயிஷா 164, எம்.எஸ். செய்னப் 154, ஜே.எஸ்.எம். சிஹாப் 152, எம்.எம்.எம். பசீர் 150, எம்.ஆர். சாபித் 150, எம்.ஆர்.எப். சுஹா 147, எம்.ஆர்.எப். ்ஹன்பா 147 புள்ளிகளை பெற்றுள்ளனர்.


    அல் ஹிலால் தேசிய பாடசாலையைச் சேர்ந்த காஷிப் இம்ரான் 165, எம்.எப்.எப். சாரா 157, வேனு கிரிஷான் 155, எம்.ஐ. பாத்திமா 150 என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.


 சித்திபெற்ற மாணவர்களுக்கு பாடசாலைகளின் சமூகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.