பாசம் காட்டி 25 இலட்சம் ரூபா மோசடி செய்த நபர்கள்
கிராந்துருகோட்டே, மிலத்தேவ மற்றும் சுவசக்திபுர பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25 மற்றும் 37 வயதுடைய கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கம்பஹா, ஜாஎல, கந்தான, பமுனுகம, வீரகுள, பூகொட, பேராதனை ஆகிய இடங்களில் ஆசிரியர்கள் போல் நடித்து இந்த மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு போலியான தொலைபேசி இலக்கங்கள் மூலம் அழைத்து தமது பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவசர சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி, அவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் இவ்வாறு சுமார் 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment