Header Ads



2024 வரவு செலவுத் திட்டம் - ரணில் என்ன தரப் போகிறார்..?


எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட பாதீட்டு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் மேற்கொண்டஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, 2017 , 2021  இரண்டு ஆண்டுகளுக்கிடையில் மதிப்பிட முடியாத வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளின் சதவீதம் 45 சதவீதமாகும். ஆனால் 2022 முதல் 2023 வரை இது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இலங்கையர்களாகிய நாம் இப்போது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த நிலைமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பொது நிதி நிர்வாகத்தின் பலவீனம். அந்த பலவீனங்களுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பொது நிதி நிர்வாகத்தில் பொறுப்புணர்வின்மையும் ஒரு காரணம். மற்றொரு காரணம் வெளிப்படைத்தன்மை இல்லாமை. பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததால் ஊழல், மோசடி, நிதி முறைகேடு ஆகியவை தலைவிரித்தாடுகின்றன.


சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கைகள் உற்பட கடந்த மாதம் இலங்கையின் நிர்வாகத்தின் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் விசாரணையில், தெளிவாகவும் குறிப்பாகவும் தீர்க்கமாகவும் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு விஷயங்கள் பொறுப்புக்கூறலுடன் வெளிப்படைத்தன்மையையும் உருவாக்க வேண்டும்.


ஒரு நாட்டின் பட்ஜெட் பொது நிதி நிர்வாகத்தின் மிக முக்கியமான பகுதியாகும். அந்த ஆண்டில் அரசாங்கம் எப்படி பணம் சம்பாதிக்கும்? எப்படி செலவு செய்யவேண்டும் என்பது பட்ஜெட் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. வரவு-செலவுத் திட்டத்தின் பெறுமதியும் பலமும் நிலைநாட்டப்படுவது வெறுமனே வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் அல்ல  அதற்கு மாறாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம்தான். பொறுப்புக்கூறல் என்பது நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளில் தான் பிரதிபலிக்கும். பட்ஜெட் முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதும் பகிரங்கமாகபொது மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது பண்பான செயல் மட்டுமல்ல வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும் அது  உதவுகிறது. அடுத்த ஆண்டு பட்ஜெட் முன்வைக்கப்படும் போது, ​​எங்கள் பட்ஜெட் ஆவணத்தில் உள்ள முன்மொழிவுகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. ஆனால் பட்ஜெட் முன்மொழிவுகள் குறித்து அப்படி எந்த ஆய்வும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. செலவினம் சரியாக செய்யப்படவில்லை என்றால், அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், அது சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்பதைத்தான் அது வெளிப்படுத்துகின்றது.


வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் இல்லாமையால், சர்வதேச அளவிலும், நாட்டிற்குள்ளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து வருவது தான் இன்று நாம் எதிர்நோக்கும்  பாரதூரமான பிரச்சினையாகும். இல்லாத அந்த நம்பகத்தன்மையை உருவாக்க பொறுப்புக்கூறலும் நம்பகத்தன்மையும் ஏற்படுத்த வேண்டும். பட்ஜெட் வாக்குறுதிகள் மக்களுக்குச் சொந்தமான பணத்தின் அடிப்படையில் தான்  நடைபெறுகின்றது. எனவே, பட்ஜெட் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா இல்லையா? அப்படியானால், அது பாதிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பதை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தற்போது மறைந்து இல்லால் இருக்கும்  நம்பிக்கையை மீண்டும் உருவாக்க முடியும். உண்மையை மறைப்பதால்  நம்பிக்கையை உருவாகாது.அதற்குப் பதிலாக சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெறும். கடந்த காலங்களில் பட்ஜெட் முன்மொழிவுகள் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டன. தகவல் அறியும் சட்டம், 2016 பட்ஜெட் குறித்த தகவல்களை பொதுமக்கள் கேட்காமலேயே பகிரங்கப்படுத்த வேண்டும் எனத் தெளிவாக கூறுகின்றது.


மக்களின் வரிப்பணத்தில் தான் பட்ஜெட் திட்டங்கள் தயாரித்துச் செயல்படுத்தப்படுகின்றன. அவ்வாறு குறிப்பிடப்படாத அனைத்து வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது. ஆனால், மக்கள் பணத்தை வைத்து என்ன செய்கின்றார்கள் என்பதைப் பகிரங்கமாக் கூற அரசு தயங்குகின்றது. 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் 68 சதவிகிதம் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் பகிரங்கப்படுத்தவில்லை என வெரிடே ஆராய்ச்சி நிறுவனம்  தெரிவிக்கின்றது. அதுமட்டுமின்றி,  அது பற்றிய தகவல்களைக்  கேட்டாலும் வழங்குவதில்லை. அங்கு சில அரசு நிறுவனங்கள் அடுத்தலருக்குப் பந்தைக் நகர்த்தும் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றன. 2023 வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளில் 48 சதவிகிதம் குறித்து தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை எனக் கூறும் வெரிட்டி ரிசர்ச் நிறுவனம், அதற்கு மேலாக 20 சதவிகிதத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு போதுமான தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றது. மேலும் பட்ஜெட்டின் 4 சதவீத உறுதிமொழிகள் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு அதிக முயற்சி எடுத்ததையும் வெளிப்படுத்தியது. அவர்களின்  வேணடுகோளுக்கு இணங்க க2023 பட்ஜெட் உறுதிமொழிகள் பற்றிய 24 சதவீதமான  தகவல் மாத்திரம் கிடைத்ததாக வெரிட்டி ரிசர்ச்  நிறுவனம்  தெரிவித்தது.


2023 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 97 வீதமான நிதி ஒதுக்கீடுகள் 68 வீதமான வாக்குறுதிகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவு செலவுத் திட்ட உறுதிமொழிகளின் பெறுமதி 49.3 பில்லியன் ரூபாவாகும். எந்த முன்னேற்றமும் இல்லாத உறுதிமொழிகளின் மதிப்பு 47.7 பில்லியன் ரூபாய்களாகும். இது அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அளவை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. 2023 பட்ஜெட் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சகங்களின் எண்ணிக்கை 15 ஆகும். ஆனால் மீன்பிடி அமைச்சு மாத்திரம் தான் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டது.


தகவல் அறியும் சட்டத்தின் பிரிவு 8 ன் கீழ், அமைச்சர்கள் ஆண்டுக்கு இருமுறை பின்வரும் தகவல்களை பொதுமக்களுக்கு அறியும் வண்ணம் வெளியிட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் தமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, அந்தப் பணத்தைச் செலவழிப்பதற்கான அனைத்துத் திட்டங்கள் பற்றிய விபரங்கள், உத்தேச செலவுகள், செலவினங்கள் குறித்த அறிக்கைகள் எவரும் கேட்காமலேயே பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அத்தனை அமைச்சுக்களும் திணைக்களங்களும் அந்தச் சட்டத்தின் விதிகளை மீறியே செய்யப்படுகின்றது. முன்னேற்றத்தை வெளிப்படுத்த தயக்கம் போக்கு தற்போது  45 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளும் திருப்திகரமான முன்னேற்றம் இரண்டு மிக முக்கிய அம்சங்களாகும். ஆனால் துரருஷ்டவசமாக இதுவரை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கை 6 ஆகும். சில வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு யார் பொறுப்பு என்பது வரவுசெலவுத் திட்டத்தைத்  தயாரிக்கும்  தேசிய வரவு செலவுத் துறைக்கே தெரியாது. பட்ஜெட் தயாரித்தல்,  செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு தேசிய வரவு செலவுத் துறையே பொறுப்பாகும். ஆனால் 2023 பட்ஜெட் வாக்குறுதிகளில் 44 சதவீதத்தை செயல்படுத்துவதற்கு எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை தேசிய பட்ஜெட் துறையும் அடையாளம் காணத் தவறிவிட்டது என்பதை வெரிட்டி ரிசர்ச்  அதன் ஆய்வில் வெளிப்படுத்துகின்றது. 2022 இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 71 சதவீதத்தை நடைமுறைப்படுத் துவதற்கு யார் பொறுப்பு என்று வரவு செலவுத் துறைக்கு தெரியாது என்று De Verité Research வெளிப்படுத்தியுள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் தேசிய வரவு செலவுத் துறை எவ்வளவு பொறுப்புடன் செயல்பட்டது நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கை 6 ஆகும். சில வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு யார் பொறுப்பு என்பது தேசிய வரவு செலவுத் துறைக்கும் தெரியாது. பட்ஜெட் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு அந்தத் துறை பொறுப்பு. ஆனால் 2023 பட்ஜெட் வாக்குறுதிகளில் 44 சதவீதத்தை செயல்படுத்துவதற்கு எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை தேசிய பட்ஜெட் துறையும் அடையாளம் காணத் தவறிவிட்டது என்பதை வெரிட்டி ரிசர்ச் வெளிப்படுத்துகிறது. 2022 இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 71 சதவீதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு யார் பொறுப்பு என்று வரவு செலவுத் துறைக்கு தெரியாது என De Verité Research வெளிப்படுத்தியுள்ளது. தேசிய வரவு செலவுத் துறையின் பொறுப்புக்கூறலை மதிப்பிடுவதற்கு அந்தத் தகவல் ஒரு அற்புதமான கண்ணாடியாகும். 

உதாரணமாக,  2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் முன்மொழிவில் பிரதானமாக  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களை மையமாகக் கொண்டு கிளைப் பல்கலைக்கழகங்களை நிறுவும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெப்ரவரியில் அதற்கான பொறுப்பு நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  ஆனால் அந்தகைய எந்தப்  பொறுப்புக்களும் தமக்கு வழங்கப்படவில்லை என நிதியமைச்சு மார்ச் மாதம் தேசிய வரவு செலவுத் திணைக்களத்திடம் தெரிவித்தது. 2023 பட்ஜெட் முன்மொழிவில் தேசிய உற்பத்தித் திறன் ஆணையத்தை அமைக்க முன்மொழியப்பட்டது.  இந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்கு தொழில் அமைச்சு பொறுப்பு என தேசிய வரவு செலவுத் திணைக்களம் கூறியது. ஆனால் தமக்கு அத்தகைய எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என தொழில் அமைச்சு கூறுகிறது. அமைச்சுக்களும் திணைக்களங்களும் எந்தளவுக்கு பந்தை, அற்புதமாகவும் துல்லியமாகவும் நகர்த்துகின்றன என்பது இந்தத் தகவலின் மூலம்  தெரியவந்துள்ளது.


  ஒரே மாதிரியான வாக்குறுதிகளை திரும்பத் திரும்பச் சொல்வதும், அதைக் காப்பாற்றத் தவறுவதும் அரசாங்கத்தின்  மற்றொரு குறிப்பிடத்தக்க விடயமாகும். நெடுஞ்சாலைகளின் இருபுறத்திலும் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்குவது 2017 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். பட்ஜெட்டில்  அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 1000 மில்லியன் ரூபா. ஆனால் இன்றும் அது நிறைவேற்றப்படாத வாக்குறுதியாகவே காணப்படுகின்றது. மில்லனியா ரோஜானா தொழிற்பேட்டைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை புணர்நிர்மாணம் செய்வது 2018 பட்ஜெட் திட்டமுன்மொழிவாகும். வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை தொகை 2000 பில்லியன் ரூபாவாகும். இன்றும் அது மீறப்பட்ட வாக்குறுதியாகவே காணப்படுகின்றது. காங்கேசன்துறை, கிழக்கு மாந்தை, பரந்தன், கொண்டச்சி, கிண்ணியா, சம்மாந்துறை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் கைத்தொழில் வலயங்களை உருவாக்குவது 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவாகும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 1000 மில்லியன் ரூபா. ஆனால் பட்ஜெட் முன்மொழிவில் அதற்கு என்ன நடந்தது என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.


  பிங்கிரிய மற்றும் பாகவத கைத்தொழில் வலயங்களுக்கான உட்கட்டமைப்பை உருவாக்குவதற்காக 2019 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்றும் அது முழுமையடையாமல் அப்படியே உள்ளது. காலி, குருநாகல், அனுராதபுரம், கண்டி உற்பட மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஐந்து முழுமையான தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவுவது 2021 வரவு செலவுத் திட்ட முன்மொழிவாகும். அதற்காக 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த முன்மொழிவும் முழுமையடையாமல் அப்படியே காணப்படுகின்றது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது 2023 பட்ஜெட் முன்மொழியப்பட்ட திட்டமாகும். அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பிரேரணைக்கு என்ன நடந்தது என்பது  இன்னமும் வெளிப்படுத்தவில்லை.


நிதியமைச்சர் வரவுசெலவுத்திட்ட யோசனைகளை வாசிக்கும் போது கைகளாலும், புத்தகங்களாலும் மேசைகளை அடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள்  அவர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. பல பட்ஜெட் முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் பட்ஜெட் ஆவணத்தின் பக்கங்களுக்கு இடையே சிக்கிக் கொள்வதுதான் அந்த சந்தேகத்திற்கு காரணமாகும். புதிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களை ஸ்தாபிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அல்லது வாக்குறுதிகளை முன்னைய அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தத் தவறியதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அரசாங்கங்கள் ஒருபோதும் சொல்வதைச் செய்வதில்லை, செய்யாததைச் சொல்வதையும் கணக்காளர் நாயகத்தின்  சான்றிதழ்  தெளிவாக வெளிப்படுத்துகிறது. 2024ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் வரவுசெலவுத் திட்டம் ஒரே மாதிரியாக இருக்குமா இல்லையா என்பதை அடுத்த ஆண்டு இறுதியில் முடிவு செய்யலாம். அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு  எமக்குச்  செய்வதற்கு  ஒன்றுமில்லை?


(குறிப்பு - குணசிங்க ஹேரத்)

No comments

Powered by Blogger.