திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி, பாதயாத்திரை சென்ற இளைஞர்கள்
தற்போதைய காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் ஆவது பெரும் பாடாக உள்ளது.
இந்தநிலையில், இந்தியா-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,
“நாங்கள் விவசாயம் செய்வதால் எங்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், இதுவரை திருமணம் ஆகாமல் உள்ளோம். இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள 50இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து, சுமார் 160 கி.மீ தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று, எங்களுக்கு மணப்பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் வழிபட்டோம்” என தெரிவித்துள்ளனர் .
மேலும் சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞர்கள், திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.
Post a Comment