15 மில்லியன் ரூபா பணத்தை, வைப்பிலிட்ட மைத்திரிபால - 85 மில்லியன் மீதி எங்கே..?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட 311 மில்லியன் ரூபாயில் 36,825,000 ரூபா பணத்தை இழப்பீட்டு அலுவலக நிதிய கணக்கிற்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க வேண்டிய 100 மில்லியன் ரூபா பணத்தில் 15 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர 1,725,588 ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 1,725,588 ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் 5 மில்லியன் ரூபாவும், ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன 4.1 மில்லியன் ரூபாவும் இதுவரை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நட்டஈடு தொகை முழுமையாக வைப்பிலிடப்பட்டதும் பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் நட்டஈடு செலுத்தப்படும் என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment