Header Ads



இஸ்ரேலில் 10,000 இலங்கையர்களை பணிக்கமர்த்த ஒப்பந்தம்


10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி  வழங்கியுள்ளது.


இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


இஸ்ரேலிய நிறுவனங்களில் விவசாய துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டுக்கு வரவழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.


இந்த நிலையில், முதல் கட்டமாக இலங்கை விவசாய தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.


இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் காரணமாக இஸ்ரேலின் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


அந்நாட்டு விவசாயத்துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மதம் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

Powered by Blogger.