ஜேர்மன் Tv க்கு ரணில் பேட்டி - பொதுஜன பெரமுனவின் பிரதிபலிப்பு என்ன..?
ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அதிபர் ரணில் வழங்கிய நேர்காணல் தொடர்பில் தமது கட்சி மகிழ்ச்சியடைவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஜெனிவா அறிக்கைகள் பொய்யானவை என்ற மஹிந்த ராஜபக்சவின் காலத்திலிருந்த தமது கட்சியின் நிலைப்பாட்டை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் ஜேர்மன் சென்ற அதிபர் ரணில் அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ஐநா அறிக்கை முற்றிலும் பொய்யானது என்றும் அதனை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என கடும் கோபத்துடன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment