Header Ads



எம்.பி. பதவியை இழப்பாரா நசீர்..? புதிய Mp ஆக அலிஸாஹிர் நியமனம் பெற வாய்ப்பு


(ஏ.எஸ்.மெளலானா)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து  அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்ச நீதிமன்றம் இன்று -06- வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிட்டுள்ளது.


இதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான புதிய பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா நியமனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

கட்சியின் தீர்மானத்தை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கும் பட்ஜெட்டிற்கும் ஆதாவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்படுவதாக

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.


இதை ஆட்சேபித்து அமைச்சர் நசீர் அஹமட் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான வழக்கின் தீர்ப்பே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.


இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


1 comment:

  1. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மிகவும் கௌரவமானது, நீதியான தீர்ப்பு என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இந்த நதீர் ஆடிய ஆட்டத்துக்கு நிச்சியம் முடிவுகட்டப்பட வேண்டும். அந்த வகையில் இந்த தீர்ப்பை வரவேற்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.