IMF விரும்பும் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது
சர்வதேச நாணய நிதியம் விரும்பும் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இது எந்த வகையிலும் அந்த சர்வதேச நிறுவனத்திற்கு எதிரான விரோத நிலைப்பாடு அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாத்தியமானதை செயல்படுத்தும் அதேநேரம் ஏனைய விடயங்களில் மாற்று வழிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டின்போது மக்கள் மீது சுமை சுமத்தப்படமாட்டாது என்று இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment