உலகக் கிண்ண வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களை குவித்து தென் ஆப்பிரிக்கா சாதனை - இலங்கைக்கு இமாலய இலக்கு
டெல்லி - அருண் ஜெட்லி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்றி இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணியின் முதல் விக்கெட் 10 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டெம்பா பவுமா எட்டு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்செய்தனர்.
இருவரும் இணைந்து 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்தனர், இதில் குயின்டன் டி காக் 100 ஓட்டங்களையும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 108 ஓட்டங்களையும் பெற்று சதம் கடந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஐடன் மார்க்ராம் குறைந்த பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். வெறும் 54 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 106 ஓட்டங்களை குவித்தார்.
இறுதியாக டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களை பெற்றிருந்தார். இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்க இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை அணிக்கு 429 என்ற இமாலய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post a Comment