Header Ads



உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்


இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனித உயிரிழப்புக்களை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சிறை பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்கான (காசா) உணவு, நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை நிறுத்துவது என்ற இஸ்ரேல் அரசின் முடிவானது மனிதநேய நெருக்கடியை மோசமடைய செய்கின்றது.


அதுமட்டுமின்றி, குறித்த மனிதாபிமானமற்ற செயல் பல தலைமுறைகளுக்கு பாலஸ்தீனர்களின் சிந்தனைகளை கடினம் ஆக்கிவிடும் என ஒபாமா சுட்டிக்காட்டினார்.


அத்துடன், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள ஒபாமா, இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று அந்நாட்டுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


எனினும்,  இதுபோன்ற போர்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.