Header Ads



யா அல்லாஹ்! எனது முயற்சிகள் தோற்கின்ற நேரத்தில் என்னுடைய உதவியும், எனது விடியலும் நீயேதான்...


அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்


يا نور النور ، يا مدبر الأمور ، يا باعث من في القبور ، يا شافي الصدور ،
اجعل لي وللمسلمين جميعا من الضيق فرجا ، ومن الهم مخرجا
وارزقنا سكينة وطمأنينة ترح بها قلوبنا يا أكرم الأكرمين

ஒளிகளுக் கெல்லாம் ஒளியானவனே!
காரியங்களைத் திட்டமிடுபவனே!
மண்ணறையிலிருந்து எழுப்புபவனே!
இதயங்களைக் குணப்படுத்துபவனே!

கருணை மிகு அல்லாஹ்வே!

என்னையையும் முஸ்லிம்கள் அனைவரையும்
நெருக்கடியிலிருந்து விடுவித்து மகிழ்ச்சியை ஏற்படுத்துவாயாக!

கவலை யிலிருந்து வெளியேறும் வழியை உருவாக்குவாயாக!

எங்களுக்கு, மனஅமைதி,நிம்மதியை அளிப்பாயாக!
அவற்றின் மூலம் எங்களின் உள்ளத்தில் சாந்தி ஏற்பட செய்வாயாக!

கண்ணியமிக்கோரில் மிக கண்ணியமானவனே!

‏اللهم اجعلنا هادين مهتدين غير ضالين ولا مضلين سلما لأوليائك وعدوا لأعدائك نحب بحبك من أحبك ونعادي بعداوتك من خالفك

அல்லாஹ்வே! எங்களை நல்வழி பெற்றோராய்,

நல் வழியே பெறச் செய்வோராய் ஆக்குவாயாக!

வழிகெட்டவர்களாகவும், பிறரை வழிகெடச் செய்யபவர்களாகவும் இல்லாமல், உனக்கு உவப்பான நேசர்களின் நண்பர்களாக உனது விரோதிகளின் எதிரிகளாக எங்களை ஆக்குவாயாக!

படைக்கப்படைவைகளில் உன்னை நேசித்தவர்களை, உன்னை நேசித்த காரணத்தினால் நாங்களும் நேசிக்கவும், படைக்கப்படவர்களில் உனக்கு மாறு செய்தவர்கள் மீது உனக்கு விரோதம் கொண்ட காரணத்தால் நாங்களும் அவர்களை விரோதம் கொள்ளவும் செய்வாயாக!

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏

“இரட்சகனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”.

எனக்குப் பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக,
பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”.

“(மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87

யா அல்லாஹ்! எனது முயற்சிகள் தோற்கின்ற நேரத்தில் என்னுடைய உதவியும்,எனது விடியலும் நீயேதான்.

என் ரப்பே! என்னுடைய காரியங்களை திட்டமிட்டு நிறைவேற்றுவாயாக!
அண்ணல் நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக
ஆமீன்.

No comments

Powered by Blogger.