கர்ப்பிணிப் பெண் மீது மோதிய ஆட்டோ
விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பணி நிமித்தமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.
மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த அவந்தி கருணாரத்ன என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாவார். அவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை, ஆனால் உள் இரத்தப்போக்கு காரணமாக ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி அதிக குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment