Header Ads



புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணை


இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியான விவகாரம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இவ்வாறு சட்டவிரோத செயலில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக தராதரம் பாராது  நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


பரீட்சையின் பின்னர் சமூக ஊடகங்களில் வினாத்தாள்கள் வெளியாகியிருப்பதன் மூலம் பரீட்சையின் இரகசியத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத போதிலும், அது பிள்ளைகளின் மன நிலையை பாதிக்கக் கூடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை (15) நாடளாவிய ரீதியில் 2,888 நிலையங்களில் நடைபெற்றது.


அந்தப் பரீட்சைக்கு முந்நூற்று முப்பத்தேழாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.


பரீட்சை முடிந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னரும் பரீட்சை வினாத்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்து இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் முதலாம் இரண்டாம் வினாத்தாள் வெளியாகின.


பரீட்சை தாள்கள் பரீட்சை முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான இரகசிய ஆவணங்கள் மற்றும் அதற்கு முன்னர் அவற்றை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

No comments

Powered by Blogger.