Header Ads



நபிகள் நாயகம் அவர்கள், ஒரு குறிப்பிட்ட இனத்திற்கும் மட்டும் சொந்தமானவரல்ல - பேராசிரியர் ரோகித்த


(அஷ்ரப் ஏ சமத்)


இந்தியாவைச் சேர்ந்த தமிழ் நாட்டின் எழுத்தாளரும், மதுரை அரச பல்கழைக்கழக  பேராசிரியர் ஏ. மார்க்ஸ் அவர்கள் எழுதி வெளியிட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலமான நுாலான, நான்  புரிந்து கொண்ட நபிகள் என்ற நுாலை 2019ல் இந்தியாவில் வெளியீட்டிருந்தார். இந் நுாலை திகாரியில் உள்ள தன்வீர் அகடமியின் அனுசரனையில்  இலங்கையில் சிங்கள மொழிபெயர்ப்பு நுால் ”முகம்மத் நபித்துமாகே பிலிவந்த மகே கியவீம” எனும் பெயரில்   மொஹமட்  ராசுக் அவர்களினால் சிங்கள மூலம் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று 04.ஆம் திகதி  பி.பகல். வெளியீட்டு வைக்கப்பட்டது


இந்நிகழ்வு தன்வீர் அகடமியின் தலைவர் எம்.எச்.ஏ ஹசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சர்வதோய அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரும்,   இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவருமான டொக்டர் வின்னியா ஆரியரத்தின அவர்கள்  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

.

இந் நுால் பற்றி பிரதான விமர்சன உரையை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின்  பேராசிரியர் ரோகித்த திஸாநாயக்க மற்றும் முன்னாள் மலேசிய பல்கலைக்கழக விரிவுரையாளரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொருளாளர் கலாநிதி  ஏ. அஸ்வர்  அசாகிம்  ஆகியோறும் உரையாற்றினார்கள்..


பேராசிரியர் ரோகித்த இங்கு உரையாற்றுகையில் - 

இந் நுாலை வெளியிட்ட பேராசிரியர் மாக்ஸிடன் தமிழ்நாட்டில் உள்ள அவரது பல்கலைக்கழகத்தில் நான் 3 வருடம் கற்றுள்ளேன். அவருடன் பழகியதால் குறிப்பாக இஸ்லாம் பற்றி இந்தியாவில் வேபறுபட்ட காலத்தில்  இந் நுாலை அவர் வெளியிட்டார்.  குறிப்பாக இலங்கையில்  பெரும்பான்மை மக்களும்  ஏனையவர்கள்  நபி (ஸல்) அவர்கள் பற்றி கட்டாயம் அறிந்து கொள்வதற்கு இந் நுால் பெரிதும் பயனடைவார்கள்.


ஒர் குறிப்பிட்ட இனத்திற்கும் மட்டும்  நபி (ஸல்) முஹம்மத் அவர்கள் சொந்தமானவர் அல்லர். அவரது வாழ்க்கை வரலாறு,ஓர் சீரிய வாழ்க்கை முறைகள், அவர், மக்கா ,மதினா நபி அவர்கள் வாழ்ந்த அனுபவித்த முறைமை, பொறுமை, விட்டுக் கொடுப்பும் அவரது மனைவி ஆயிஷா நாயகியின் வேண்டுகோளின் பேரில் பெண்களுக்கு அவர் அளித்த உரிமைகள் என்பன ஏனையவர் தெரிந்துகொள்ள வேண்டிய ஓர் சீரிய வாழ்க்கை முறையாகும். இந் நுால் இலங்கையில் சிங்கள மொழி மூலமான கற்றவர்கள் கட்டாயம் இதனைத் அறிந்து கொள்ள  கூடிய வகையில் இதனை வெளியீட்டமைக்காக தன்வீர் அகடமி சிறந்த ஓர் செயற்பாட்டை செய்துள்ளதை பேராசிரியர் அங்கு பாராட்டிப் பேசினார்.


இந் நிகழ்வில் திகாரிய தன்வீர் அகடமியின் மாணவர்கள், சிங்கள கவி வாழ்த்தும், அரபு எழுத்துக் காட்சியும் இடம்பெற்றன. அத்துடன் தன்வீர் அகடமியின் அதிபர் அப்துல் ரஹ்மான் அங்கு  வருகை தந்திருந்த மும் மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்களுக்கும் ,நுால்களை  இலவசமாக கையளித்தார். . இந் நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், இஸ்லாமிய கற்கை நெறிகளைக் பயிலும் மாணவர்கள், தமிழ்,பௌத்த கிரிஸ்த்துவ இன நல்லுரவு சமுக தேசிய   இயக்கங்களது உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.