ஹமாசிடம் பணயக் கைதியாகவுள்ள இலங்கையர்
இலங்கையை சேர்ந்த ஒருவர் ஹமாசிடம் பணயக்கைதியாக சிக்கியிருக்கலாம் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுஜித் பண்டார யட்டவர என்ற இலங்கையர் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து காணாமல்போயுள்ளார்.
இந்த நிலையில் அவர் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிபட்டிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கைதூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியில் நிச்சியம் உண்மை இருக்கமுடியாது. ஹமாஸ் ஏன் ஒரு இலங்கையரை பணயக்கைதியாக வைத்திருக்க வேணடும். அதனால் ஹமாஸுக்கு எந்த நன்மையுமில்லை. பயங்கர யுத்தத்தின் போது பணயக் கைதிகளைப் பாதுகாத்து , உணவளித்து, மருந்துகள் கொடுத்து ஏன் இலங்கையரை வைத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கு யாரிடம் பதிலிருக்கின்றது. அத்தகைய மடத்தனமாக செயல்களைச் செய்யுமளவுக்கு ஹமாஸ் இருக்க முடியாது. சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் யாரும் எதிர்த்துப் பேசுவதற்கு இல்லை என்ற காரணத்தால் இஸ்ரவேல் நாட்டிலுள்ள இலங்கைத் தூதுவர் வௌிநாட்டு அமைச்சுக்குத் தெரிவித்த செய்தி இது. வழமையாக மூளையின்றி செயல்படும் வௌிவாநட்டு அமைச்சும் கிளிப்பிள்ளை போன்று இதனைத் திருப்பிச் சொல்லுகின்றது. ஏனெனில் அதன் சிந்திக்கும் திறன் பலவருடங்களுக்கு முன்னமே இல்லாமல் போய்விட்டது.
ReplyDelete