Header Ads



பொருட்களின் விலை குறையாது - அரச, தனியார் ஊழியர்களுக்கு ரணிலின் மகிழ்ச்சியான அறிவிப்பு


எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) அமைச்சரவையில் தெரிவித்தார்.


அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.


பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது தவிர குறையாது. உழைக்கும் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதியினால்   அறிவிக்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.