காஸாவில் வீசப்படும் குண்டுகள் வீசப்படும் இடத்தில், தள்ளப்பட வேண்டியவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில்
காஸா பகுதியில் குண்டுகள் வீசப்படும் இடத்தில் தள்ளப்பட வேண்டியவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.
இஸ்ரேல் - பலஸ்தீன போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“பாராளுமன்றத்தில் இப்போது உணர்ச்சிகரமான ஒரு விடயத்தைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் கண்மூடித்தனமாக கொல்லப்படுகின்றனர்.
வெடிகுண்டு வீச்சுக்கு இலக்காக வேண்டியவர்கள் பாராளுமன்றம் வந்து பாராளுமன்ற மரபுகளை நாசமாக்குகின்றனர்.
பாராளுமன்ற மரபுகளை அழிப்பவர்கள்மீதுதான் அந்த குண்டுகள் வீசப்பட வேண்டும்.
அப்பாவி குழந்தைகள் மீது அல்ல. மரபுகளை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் செயல்படுபவர்கள் குறித்து சபாநாயகர் அதிக தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்‘‘. என்றார்.
Post a Comment