ஐஸ் போதைப்பொருளுடன் அம்பியூலன்ஸ் சாரதி
- எஸ்.றொசேரியன் லெம்பேட் -
அம்பியூலன்ஸ் (நோய் காவு வண்டி)சாரதி ஒருவரைக் கைது செய்ய சென்ற மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கையை அந்த சாரதி, கடுமையாக கடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சாரதி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக மன்னார் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து முருங்கன் வைத்தியசாலை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரைக் கைது செய்ய முற்பட்டபோதே அவர் இவ்வாறு கையைக் கடித்து விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முருங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Post a Comment