Header Ads



ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாமிய கொள்கைகளுக்காகவோ, முஸ்லிம் சமூகத்திற்காகவோ உருவாக்கப்பட்டதல்ல


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அபூஹிந் தொடர்பான தகவல்களை வெளியிட நான் தயார்.  ஆனால் நம்பிக்கைத் தரக்கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.  


இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


கடந்த முறை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தில் சாந்தமருது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

 

அந்த பிரதேசம் தொடர்பில் பிரதீப்சாப் என்பவர் சீஐடியில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.  சாய்ந்தமருது மக்கள் சஹ்ரானுக்கு உதவினர்.  சஹ்ரானின் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனனர் என்றும் அதற்காக அரசாங்கம் கல்முனையில் நகரசபையொன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர். 


ஆனால் சாய்ந்தமருது மக்கள் தேசிய பாதுகாப்புக்கு பெரும் பங்களிபபு செய்தவர்கள்.  சஹ்ரானின் குழுவினர் அங்கே இருந்து போது அவர்களை அந்த மக்கள் காட்டிக்கொடுத்து அவர்களை அந்த இடத்திலேயே அழிக்க உதவினர். 


இதனை நகர சபையுடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.  


இதேவேளை,   இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் இங்கே பேசும் போது இஸ்லாமிய கொள்கை மற்றும் இஸ்லாமிய கோட்பாடு தொடர்பில் தவறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அசாத் மௌலானா அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்காது அவர் இஸ்லாமிய கொள்கைகள் தொடர்பில் தவறாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  


இந்த தகா்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் எவ்வாறு புலனாய்வு பிரிவனரால் பாதுகாக்கப்பட்டார் என்பதையும் கூற வேண்டும். சஹ்ரான் சுதந்திரமாக நாடு முழுவதும் சுற்ற உதவியுள்ளனர் என்ற சந்தேகங்கள் உள்ளன.


சாரா ஜஸ்மின் விவகாரத்திலும் மர்மங்கள் உள்ன.  ஆட்சி மாற்ற தேவைக்காக இவை நடைபெற்றதா என்ற சந்தேகங்களும் உள்ளன. 


அபூஹிந்த் என்பவர் சஹ்ரானுடன் கதைத்துள்ளதாக அவரின் மனைவி விசாரணை ஆணைக்குழவில் பேசியுள்ளார். அந்த அபூஹிந்த் யார்? அவர் எங்கிருந்து பேசியுள்ளார் என்பதும் தெரியும்.


உள்ளக விசாரணையோ நம்பிக்கைத் தரக்கூடிய விசாரணையோ நடக்குமாக இருந்தால் இந்த அபூஹிந்தின் பின்னணி, இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் சாட்சியமளிக்க நான் தயாராக இருக்கின்றேன்.  இதன்படி இந்த தாக்குதல் இஸ்லாமிய கொள்கைகளுக்காகவோ முஸ்லிம் சமூகத்திற்காகவோ உருவாக்கப்பட்டது அல்ல என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.