இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ஊனமுற்ற, பாதி குருடான பலஸ்தீன தளபதி குறித்து இஸ்ரேலிய எழுத்தாளர் கூறியிருப்பது
- Fairooz Mahath -
ஊனமுற்ற ஒரு பலஸ்தீன தளபதி, பாதி குருடானவர், அவரது பெயர் முஹம்மத் அழ்ழைஃப் .
இந்த போருக்கு அவர் மிக நுணுக்கமாக திட்டம் தீட்டுகின்றார். 20 குடியேற்றங்கள் மற்றும் 11 இராணுவத் தளங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததன் மூலம் 50 வருடங்கள் அளவு நீடிக்கக்கூடியதொரு குழப்பத்திற்குள் எம்மை தள்ளியுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களின் உடல்களையும், தற்போது காஸாவில் உள்ள சுரங்கப்பாதையில் உள்ளவர்களின் உடல்களையும் எம்மால் கொண்டு வர முடிந்தாலும், “காசா என்விலப் ” பகுதியில் ஏற்பட்ட பேரழிவை எம்மால் மறக்க முடியாது” .
இது இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி முஹம்மத் அழ்ழய்ஃப் குறித்து இஸ்ரேலிய எழுத்தாளர் Ron Kaufman சொன்ன வரிகள்.
ஹமாஸ் ... உடலில் மூளையையும் முகத்தையும் தவிர எல்லா உறுப்புகளும் இயக்கமில்லாமல் போன அஹ்மத் யாசீன் என்ற ஊனமுற்ற ஒருவரால் உலகின் முதல் தர சக்திக்கு சவாலாக உருவாக்கப்பட்டது.
அந்த இயக்கத்தின் ஆயுத போராட்ட சிறகுதான் இஸ்ஸதீன் அல்கஸ்ஸாம். இதெற்கெல்லாம் அடிப்படை சிந்தனை மூலம் ஒன்று இருக்கிறது. அது இஸ்ரேலின் மொஸாட் பின்னணியை கொண்ட ஐ எஸ் ஐ எஸ் அல்ல. உலகின் இஸ்லாமிய சிந்தனையையும் எழுச்சியையும் போஷிக்கின்ற இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு.
Post a Comment