Header Ads



முரளீதரன் மன வேதனை


மலையகத்திலுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்க அனுமதி பெறப்பட வேண்டுமென்ற போதும் அனுமதி வழங்கப்படுவதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குற்றஞ்சுமத்துகின்றார்.


கொழும்பில் நேற்றிரவு (11.10.2023) இடம்பெற்ற சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


இதன்போது மலையகத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


இதற்கு அவர் பதிலளிக்கையில், இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, எனது அமைப்பின் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


எனினும், மலையகத்திலுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்க அனுமதி பெறப்பட வேண்டும். எனினும் அவ்வாறான அனுமதி வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.



இலங்கை வான் பரப்பிலிருந்து விழுந்த மர்ம பொருளால் குழப்பத்தில் மக்கள்

இலங்கை வான் பரப்பிலிருந்து விழுந்த மர்ம பொருளால் குழப்பத்தில் மக்கள்

ஒரு மைதானத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், பாடசாலைகளுக்கு கல்வி பணிப்பாளர்கள் இருப்பார்கள். அவர்களின் அனுமதி வேண்டும். அனுமதி இல்லாமல் நடக்காது. என்றபோதும் அனுமதி கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள். அந்த பணிப்பாளர்கள், பாடசாலைகளிலுள்ளவர்கள் எல்லாம் அரசியலுடன் தொடர்புப்பட்டவர்கள்.


முற்சித்தும் பலனில்லை

மைதானங்களை எடுத்துக் கொண்டால், அது மாநகர சபைக்கு சொந்தம். மாநகர சபை அரசாங்கத்திற்கு சொந்தம். அதில் ஏதாவது செய்யப் போனால், அவர்களின் அனுமதி வேண்டும். ஒவ்வொரு இடங்களில் முயற்சி செய்து பார்த்தோம். கிடைக்கவில்லை.


நுவரெலியாவின் குதிரை பந்தய திடலில் முயற்சி செய்தோம். அதிலும் கிடைக்கவில்லை. மற்ற இடங்களில், அதாவது யாழ்ப்பாணத்தில் எல்லாம் செய்துள்ளோம். யாழ்ப்பாணம் ஜோன்ஸ் கல்லூரியில் விக்கெட் எல்லாம் நாங்கள் தான் செய்துகொடுத்தோம்.


சிமெண்ட் விக்கெட் நாடு முழுவதும் 60 முதல் 80 வரை செய்துகொடுத்துள்ளோம். இந்த மாதிரி உதவி செய்துள்ளோம். இந்த மாதிரி மலையகத்தில் செய்ய போகும் போது, அனுமதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.