போதை தலைக்குள் பாய்ந்ததால், பாழடைந்த இடத்தில் ஒன்றரை மாத குழந்தையை கைவிட்டுச்சென்ற தாய்
கிரிபத்கொடை தளுகம பிரதேசத்தில் பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்குள் போதையில் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கைவிட்டுச் சென்ற , குழந்தையின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான பெண் கட்டிடத்திற்கு அருகில் நடமாடி திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 25 வயதான இந்த பெண் களனி பியமக வீதி, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதோடு அப்பெண் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என கூறிய பொலிஸார், கைதான பெண்னை மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாளைய (10) தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment