கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் காவலாளி சடலமாக மீட்பு
Ismathul Rahuman
கட்டான,கந்தவள,ரமாகேவத்த தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்த ஜயகொடி கங்கானம்லாகே குமார திஸ்ஸ ஜயகொடி என்பர் மரணமான நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க அங்கு சென்று பார்த்தபோது கழுத்தில் வெட்டு காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பதில் நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பரிசீலித்த பின் நீர்கொழும்பு வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பிரேத பரிசோதனை நடாத்திய அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு கட்டான பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது மனிதப் படுகொலையாக இருக்குமென சந்தேகிக்கும் கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment