Header Ads



துருக்கியில் தற்கொலைத் தாக்குதல்


துருக்கி நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அங்காராவில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் துருக்கிய உள்துறை அமைச்சகத்திற்கு அருகாமையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.


இரண்டு தாக்குதல்காரர்கள் 09:30 மணி (06:30 GMT) அளவில் வணிக வாகனத்தில் வந்து தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார். ஒரு தாக்குதலாளி அமைச்சக கட்டடத்தின் முன் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.


துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், நாடாளுமன்றம் கூடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு சத்தம் கேட்டதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.