அமைச்சரவையில் திடீர் மாற்றம், (முழு விபரம்) பொதுஜன பெரமுனவுக்கு ஏமாற்றம்
இன்று (23) காலை மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றனர்.
வைத்தியர் ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
பொதுஜன பெரமுவைச் சேர்ந்த சிலருக்கு இந்த அமைச்சரவை மாற்றத்திலும் எந்த புதிய பதவிகளும் வழங்கப்படாத நிலையில், அமைச்சுப் பதவிகளுக்காக காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment