தப்பினார் டயானா
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் அதனை நிராகரித்துள்ளது.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் உரிமையை சவாலுக்கு உட்படுத்தி சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பிரித்தானிய பிரஜாவுரிமை காரணமாக டயானா கமகே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகேயின் எம்.பி. பதவி ரத்துச் செய்யப்படுமிடத்து, அந்த பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிககப்பட இருந்தார். எனினும் இந்த தீர்ப்பை அடுத்து தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு முஜிபுர் ரஹ்மானுக்கு இல்லாமல் போயுள்ளது.
அப்படியானால் சட்டவிரோதமான முறையில் இரண்டு அல்லது மூன்று பாஸ்ட்போர்கள், இரண்டு பிறப்புச் சாட்சிப்பத்திரங்கள் ஒருவர் வைத்திருப்பது சட்டத்துக்கு உற்பட்டதா என நாம் சட்டத்துறையில் வினாவுகின்றோம்.
ReplyDelete