Header Ads



கிணற்றில் விழுந்து தாயும், குழந்தையும் பலி


வாரியபொல- வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதுக் குழந்தையும் குழந்தையின் தாயும் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்னர்.


குருநாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம்.கோவித சாரமித் (06) மற்றும் அவரின் தாயாரான 37 வயதுடைய லக்மாலி வீரசிங்க (37) என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (22) வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாகவும் மாலை 6 மணிக்கு மேலும் இருவரையும் காணாத பட்சத்தில்  அயலவர்கள்  கிணற்றின் அருகே சோதனையிட்ட போது,  குழந்தை மற்றும் தாயின் காலணிகள்,  உடைகள் என்பவற்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது .


இது தொடர்பில்  பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து சோதனையிட்டபோது, கிணற்றுக்குள்  இருந்து  சடலங்களைக் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும்,  கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என  சந்தேகிக்கும் பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாரியபொல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.