Header Ads



வீரசேகரவிற்கு ஏமாற்றம் - அமைச்சர் பிரசன்னவிற்கும் தடை


அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்க விசா வழங்குவது கடினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுத் தலைவர்களின் பட்டறையில் பங்கேற்க குறித்த இருவரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது. 


 எனினும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்க விசா வழங்குவது கடினம் என இராஜதந்திர ரீதியில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


 அதன்படி அவர்கள் இந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 


பிரசன்ன ரணதுங்க, சரத் வீரசேகரவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா | America Rejected Visa For Prasanna And Sarath


 இந்த விஜயத்திற்கான குழுத் தலைவராக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார். 


 அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் போர் காலச் செயற்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவும் இந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


 அத்துடன், சுற்றாடல் கண்காணிப்புக் குழுவின் தலைவரான அஜித் மான்னப்பெருமவுக்கு ஒரு மாத காலம் நாடாளுமன்ற சேவை தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரு இந்த விஜயத்தையும் தவறவிடுவார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.