Header Ads



"அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்" - தனுஷ்கவின் அதிரடி பதில்


ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக்க கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.


“ஆஸ்திரேலியாவில் தனக்கு எதிராக முறைப்பாடு செய்த யுவதிக்கு எதிராக அந்நாட்டு சட்டத்துக்கமைய சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளேன்.


ஆவுஸ்திரேலியாவில் சட்டம் வேறு அப்பெண் பொய் சொல்லியிருந்தாலும் அவரிடமிருந்து நட்டஈட்டை பெற முடியாது. என்னுடைய சட்ட வல்லுநர்கள் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளனர்.


நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட எதிர்பார்த்துள்ளேன். பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். என்னை நம்பிய எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ” என தெரிவித்துள்ளார்.


அதேவேளை உங்களுடன் ஆஸ்திரேலியாவில் கைகோர்த்து வந்த யுவதி யார் என எழுப்பட்ட கேள்விக்கு, “நீங்கள் யாரென நம்புகின்றீர்கள்" என ஊடகவியலாளர்களிடம் அவர் கேட்டுள்ளார்.


காதலி என நினைக்கின்றோம் என ஊடகர்கள் பதிலளித்துள்ளனர். ” அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.” எனக் கூறிவிட்டு தனுஷ்க குணதிலக்க விடைபெற்றதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

1 comment:

  1. ஒழுக்கம் கெட்டவர்களை விளையாட்டில் சேர்த்துக் கொண்டு அவர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினால் அவர்களால் நாட்டுக்கு கிடைப்பது இழிவும் அவமானமும் தான். ஆனால் இந்த நாடு ஒழுக்கத்திலும் வீழ்ச்சியிலும் மிக வேகமாகச் சென்று கொண்டிருப்பது எமக்கு பெரும் கவலையைத்தான் தருகிறது.

    ReplyDelete

Powered by Blogger.