ரணில் மீது பொறாமை பட்டுக்கொண்டிருக்காது, அவருடைய அறிவை பயன்படுத்துமாறு கோரிக்கை
மனதில் இருக்கும் வைராக்கியம் மற்றும் வெறுப்பை நீக்கியதன் பின்னரே, வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை அனுப்பவேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.
வைராக்கியம், குரோதம் மற்றும் பொறாமை ஆகியன இல்லாத வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போதுதான், நல்லதொரு நாட்டை கட்டியெழுப்பும் இயலுமை கிடைக்கும் என்றார்.
ரணில் மீது பொறாமை பட்டுக்கொண்டிருக்காது, அவருடைய அறிவை பயன்படுத்த வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன கேட்டுக்கொண்டார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், இலங்கையர் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் கடந்த 75 வருடங்களாக தவறு செய்த இனமாகவே இருக்கின்றனர் என்றார். அதனை நிறைவுக்குக் கொண்டுவரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.
தவறுகளை திருத்தவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிக்கொருதடவை நினைவூட்டுகின்றார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment