காசாவில் சிந்தப்படும் இரத்தம் 'முஸ்லிம்களின் இரத்தம்' என்பதால், மேற்கு நாடுகள் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதில்லை
காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் நீண்ட காலமாக தற்காப்பு எல்லையைத் தாண்டி வெளிப்படையான "அடக்குமுறை, மிருகத்தனம், படுகொலை மற்றும் காட்டுமிராண்டித்தனமாக" மாறியுள்ளன என்று துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் கூறுகிறார்.
காசாவில் சிந்தப்பட்ட இரத்தம் "முஸ்லிம்களின் இரத்தம்" என்பதால் மேற்கத்திய நாடுகள் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
“மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் குறித்து சந்தர்ப்பம் கிடைக்கும்போது உடனடியாக தீர்ப்பு வழங்குபவர்கள் 19 வருடங்களாக காசாவில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமையை புறக்கணித்து வருகின்றனர். ஐநா பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை குண்டுகள் காஸா மீது விழ வேண்டும்? எர்டோகன் கூறினார்.
Post a Comment