நித்திரை செய்த, சாரதியினால் ஏற்பட்ட விபரீதம்
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் உடுவர நீலபோவில பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பதுலு ஓயாவில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்லயிலிருந்து பசறை நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி உயரமான குன்றின் மீது விழுந்து பதுலு ஓயாவில் கவிழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வாகனம் நீரில் மிதந்து கொண்டிருந்த போது, உரிமையாளர் காரில் இருந்து இறங்கி பதுலு ஓயா வெள்ளத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். தற்போது பெய்து வரும் கடும் மழையினால் பதுலு ஓயாவின் நீர் மட்டம் இந்த நாட்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment