ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க..?
அந்தவகையில் 51% வாக்குகளை மொத்த வாக்களாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தல் போரில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என்ற வதந்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தம்மிக்க பெரேரா தெரிவித்த கருத்து
பெரும்பான்மைக் கட்சிகள் தாம் வேட்புமனுத் தாக்கல் செய்வதில் இணக்கம் காணும் பட்சத்தில், அது தனது தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் உந்துதலாக அமையும் என்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியிலிருந்து களமிறங்குவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக மாத்திரம் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசியல் திட்டத்தில் ஒரு படியாக கல்வித் திட்டம் தொடங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியபோது,
இளைஞர் சமுதாயத்தை அறிவாற்றலுடன் செயற்படவும் அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் டி.பி. கல்வி தொடங்கியது.
இலங்கையில் 55 லட்சம் குடும்பங்களில் 11 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பிள்ளைகள் கல்விப் பாடசாலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.
Post a Comment