உலகளவில் தடை செய்யப்பட்ட மிகக்கொடிய குண்டுகளை வீசி, அப்பாவி பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஹமாஸ் இஸ்ரேல் போர் தொடர்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதன் போது இஸ்ரேல் காசா மீது தடை செய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகள் பூண்டுவாசனை கொண்ட ஒரு மெழுகு பொருளாகும். இவை வீசப்பட்ட இடத்தில் இருந்து பல மைல் தூரத்திற்கு புகை மண்டலமாக பரவக்கூடியது.
மேலும், இவை மனித தோல் வெந்து உருகும் அளவிற்கு தீக்காயங்களை ஏற்படுத்தி மனிதர்களை நரக வேதனைக்கு தள்ளக் கூடியவையாகும்.
அத்தோடு, குழந்தைகளுக்கு மூச்சுத்திணரலை ஏற்படுத்தக் கூடியவை அதுமட்டுமல்லாமல் இரத்த புற்று நோயை கூட ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இதை குடியிருப்புப் பகுதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் மீறி பயன்படுத்தினால் அது போர் குற்றம் ஆகும் என ஐ.நா கூறியுள்ளது.
இந்நிலையில், காசா மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் காணொளி ஆதாரத்துடன் வெளியாகியுள்ளன.
Post a Comment