உலகக்கோப்பை கிரிக்கெட் வீரர்கள் உணவில் மாட்டிறைச்சி இல்லை - பாகிஸ்தான் அணியின் நிலை என்ன..?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ட்வீட் செய்து, இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு என்ன கிடைக்கும் என்று கூறியுள்ளது.
உலகக்கோப்பைக்காக இந்தியா வரும் எந்த அணிக்கும் மாட்டிறைச்சி வழங்கப்படுவதில்லை.
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளபடி, மாட்டிறைச்சி இல்லாத நிலையில் அனைத்து அணிகளுக்கும் வித்தியாசமான மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.
"கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீன்கள் போன்ற உணவுகளுடன் பாகிஸ்தான் அணி, தனது வீரர்களுக்காக அவர்களின் தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாறுபட்ட மெனுவை உருவாக்கியுள்ளது."
சுவை மிகுந்த வேறுவேறு உணவுகளும் கிரிக்கெட் வீரர்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஜூஸ் போல நன்கு வேக வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி இறைச்சி சாப்ஸ், மணம் மிக்க மற்றும் சுவையான மட்டன் கறி, அனைவருக்கும் விருப்பமான பட்டர் சிக்கன் மற்றும் அத்தியாவசிய புரத சத்துக்காக வறுக்கப்பட்ட மீன் போன்றவை இதில் அடங்கும்.
பாகிஸ்தான் அணிக்கான மெனுவில் வேக வைத்த பாஸ்மதி அரிசியும் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் செய்தி அறிக்கை கூறுகிறது. ஒரு வேளை வீரர்கள் இலகுவான உணவை விரும்பினால், அவர்களுக்கு சாதாரணமான, காய்கறிகள் அடங்கிய புலவ் கிடைக்கும்.
இதுதவிர ஹைதராபாத்தில் பிரபலமாக விளங்கும் பிரியாணியும் வீரர்களுக்கு அவ்வப்போது கிடைக்கும்.
கிரிக்கெட் விளையாட இந்தியா வரும் வெளிநாட்டு அணியினருக்கு பொதுவாக மாட்டிறைச்சி அளிக்கப்படுவதில்லை.
இந்தியாவில் பசு புனிதமாக கருதப்படுகிறது. எனவே, நாட்டின் பல பகுதிகளில் பசுக்களைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதன்முறையாக இந்தியா வந்துள்ளது என்பதும், இரண்டு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் முதல் முறையாக இந்தியா வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி இப்போது தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 3 ஆம் தேதி விளையாடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் தனது முதல் உலகக் கோப்பை போட்டியை அக்டோபர் 6 ஆம் தேதி நெதர்லாந்திற்கு எதிராக விளையாடுகிறார்கள். அவர்களது இரண்டாவது போட்டியும் அக்டோபர் 10 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 14-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டிக்காக பாகிஸ்தான் அணி ஹைதராபாத்தில் இருந்து அகமதாபாத் செல்கிறது. இதுவரை இரண்டு வார காலம் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கும் பெயர் பெற்ற ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணியினர் இருப்பார்கள்.
பிபிசி
Post a Comment