பலஸ்தீன் நாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு - இன்றைய கூட்டத்தில் தீர்மானம்
இந்தியாவின் பாலஸ்தீனக் கொள்கை சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்து வருகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள் நீண்ட காலமாக துன்புறுத்தப் பட்டதற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்திய மகாத்மா காந்தி, 1938 ல் , இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கு அல்லது பிரான்ஸ் பிரெஞ்சுகாரர்களுக்கு சொந்தமானது போல, பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது என்றார்.
சிறையில் இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு, தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் , பாலஸ்தீனப் பிரச்சனையை இந்திய துணைக்கண்டத்தின் வகுப்புவாத பிரச்சனைகளுடன் ஒப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன விடுதலை அமைப்பை ( PLO) அங்கீகரித்த அரபு அல்லாத முதல் நாடு இந்தியா.
அதற்குப் பிறகு, 1988 ல் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அன்னை இந்திரா காந்தியை தனது மூத்த சகோதரியாக கருதினார் யாசர் அராபத்.
சுதந்திரத்திற்கு பிறகு, வெளியுறவு கொள்கையில் பாலஸ்தீன கொள்கைக்கு தனது அதிகாரப்பூர்வ ஆதரவை எப்போதும் தொடர்ந்தது இந்தியா.
Post a Comment