எனது மகளை யாருக்கு, திருமணம் செய்து கொடுப்பேன்..?
மக்கள் அவனை முட்டாள் என்றனர். அதனை தனதாக்கிக்கொண்டிருந்தால் அவன் பணக்காரனனாக மாறியிருக்கலாம் என்றனர். ஆனால் நிஜத்தில் அவன் பணம் கைவசமில்லாத செல்வந்தனாகத்தான் இருந்தான்.
சில நாட்கள் கழித்து வங்கி வரவேற்பு அதிகாரியாக அவன் பதவி உயர்ந்து. ஒரு வருடம் கழித்து வாடிக்கையாளர்களுக்கான பொறுப்பதிகரியாக பதவி உயர்ந்து. மூன்று வருடங்கள் கழித்து அந்த வங்கியின் பிராந்திய கிளையை நிர்வகிக்கும் முகாமைக்காரனாக மாறிவிட்டான். இப்போது அவன் மாதாந்த சம்பளமாக அந்த பணப்பையில் இருந்த தொகையை விட கூடுதலாக பெற்றுக்கொள்கிறான்.
பணக்காரன் என்பவன் வேறு, செல்வந்தன் என்பவன் வேறு. ஒரு வறியவனிடம் கைநிறைய பணம் இருக்கும். பணமே கைவசம் இல்லாத செல்வந்தனும் இருப்பான். ஒரு வறியவனுக்கு கோடிக்கணக்கான லாட்டரி கிடைக்கும். ஆனால் சில மாதங்கள் கழித்து அவன் மீண்டும் வறியவனாக மாறிவிடுகிறான். காரணம், அவன் இயல்பில் வறியவன் என்பதாகும்.
பணம் செல்வம் என்பது பெருத்த காசு பணத்தை சொந்தமாக்கிக்கொள்வவதல்ல. மாறாக காசு பணத்தை அடைவதற்குகான யுக்தியை கொண்டிருப்பதாகும். அதனை பெருக்குவதற்கான திறமையை பெற்றிருப்பதாகும்.
ஆதலால் ஒருபோதும் எனது மகளை ஒரு வறியவனுக்கு நான் திருமணம் செய்து வைக்கமாட்டேன்.
ஜனங்களே!
பணம் செல்வம் என்பது மனோநிலை சார்ந்த ஒரு இயற்பியல் நிலையாகும். வறுமை இயலாமை என்பதும் அப்படியே!
பணம் உள்ளவர்கள்
எல்லாம் செல்வந்தர்களும் அல்ல.
பணமே இல்லாதவர்கள் வறியவர்களும் அல்ல!
✍ பில் கேஸ்ட்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment