Header Ads



ஸ்ரீலங்கனுக்கு விலைமனு கோரப்பட்டது


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகளை வழங்குவதற்கான விலைமனுக்கள்  இன்று (31ஆம் திகதி) கோரப்படும் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி, இந்த விலைமனுக்களை வழங்குவதற்கு இன்று முதல் 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும்.


விலைமனுக்கள் கோரப்படும் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் அதற்கான நிறுவனங்களை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. உலகில் உள்ள நாடுகளும் விமான நிறுவனங்களும் சிரீலங்கா விமானநிறுவனத்தையும் அது தொடர்பான அரசியல்வாதிகளையும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளார்கள். எனவே உலகில் எந்த ஒரு நாடும் அல்லது நிறுவனமும் சிரீலங்கனில் பங்குகளை வாங்க முன்வரமாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. இந்த சாதாரண உண்மையைக்கூட இந்த வீணாப் போன அரசியல்மந்திகளுக்கி புரிந்துகொள்ளமுடியாது என்பது இந்த நாட்டின் ஒரு சாபக் கேடாகும்.

    ReplyDelete

Powered by Blogger.