தவளைகளின் இரத்தத்தை மட்டும் குடிக்கும் நுளம்பு இனம் இலங்கையில் கண்டுப்பிடிப்பு
கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
Uranotaeniatrilineata என அழைக்கப்படும் இந்த நுளம்பு இனம் தற்போது இலங்கையில் பதிவாகியுள்ள மிகச்சிறிய நுளம்பு இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நுளம்பு 2-3 மில்லிமீற்றர் அளவுடையது எனவும் இந்த நுளம்புடன் இலங்கையில் 156 வகை நுளம்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
108 ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவில் இருந்து இந்த நுளம்பு இனம் பதிவாகி பின்னர் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னரே இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் டெதுனு டயஸ் மற்றும் செயலதிகாரி சுஜாதா பத்திரகே ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பூச்சியியல் அதிகாரிகளான பிரமித ரங்கன, நளீன் ஜயசிங்க, எரந்த ஹேவாவிதாரண, சஜித் தாரக, ருவன் சமிர, ரொஹான் சமரசேகர, மற்றும் ஆரிஷ்ய வருஷவிதாரண ஆகியோர் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment