பொலிஸ் போல நடித்து கொள்ளை, அடையாள அட்டையை கேட்டு உறுதிப்படுத்துங்கள் என அறிவிப்பு
பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவத்தகம பொலிஸாரால் இன்று (02.10.2023) கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதான நிகடலுபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
'' பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் காட்டிக்கொண்டு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை மாவத்தகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் 12.09.2023 ஆம் திகதி மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பகுதிகளில் 207,000 ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
இந்த கொள்ளையில் இருவர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள் திருட்டுகளில் ஈடுபடுபவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பணக் கொள்ளையில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபருக்கு கிட்டத்தட்ட 06 பிடியாணைகள் உள்ளன.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக குருநாகல், புத்தளம், மாரவில போன்ற நீதிமன்றங்களில் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அதிகாரிகளாகிய, ஒருவர் சிவில் உடையில் வந்தால், குற்றப் புலனாய்வுத் துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, ஏதேனும் விசாரணை நடத்தினால், அவர்களின் அடையாள அட்டையைப் நீங்கள் கேட்டு பொலிஸ் அதிகாரிகள்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
Post a Comment