இது ஒன்றும் எங்கள் குற்றமல்ல...!
கொந்தளிப்பின் மையப் புள்ளி " என்ற நூலில் கலாநிதி முஸ்தபா மஹ்மூத் கூறுகிறார்:
"இதுவே பன்னெடுங்காலமாக நடந்தது வரும் உலக நியதி...!
எழுத்தாளனை விட நடனக்காரியே அதிகம் சம்பாதிக்கிறாள்...!
தச்சன், கொத்தன், பான்காரனை விட பறை அடிப்பவன்தான் அதிகம் சம்பாதிக்கிறான்...!
நீங்கள் வேண்டுமெறால் ஒரு அறிவியல் மாநாட்டுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்யும் இன்னொரு பத்திரிகை மாநாட்டுக்கு ஒரு அரை நிர்வாண நடனக்காரியையும் அழைப்புவிடுத்துப் பாருங்கள்!
மக்கள் கூட்டம் கூடமாக அந்த ஆட்டக்காரியின் பின்னால்தான் ஓடுவார்கள்! ஐன்ஸ்டீனையும் அவர் விஞ்ஞானத்தையும் தூக்கி எறிந்துவிடுவார்கள்.
இது ஒன்றும் எங்கள் குற்றமல்ல...!
தொகையான மனிதர்கள் மிருக சாதிகள், சிற்றின்ப அடிமைகள், மன இச்சைக்கு வழிபாடு செய்யும் பூசாரிகள்.
ஆதலால்தான் அவர்கள் துச்சமான விடயங்களுக்கு கைதட்டுவார்கள். சீரிய நெறியை விட்டும் விரண்டோடிவிடுவார்கள்."
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment