இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை, அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுடன் ஒப்பிட்ட ஜோ பைடன்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல்மீது நடத்தியிருக்கும் தாக்குதலை, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-காயிதா அமைப்பு நடத்திய தாக்குதலுடன் ஒப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
மேலும், அந்தத் தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்கா ஆத்திரத்தில் எதிர்வினையாற்றியதாகவும், அதில் சில தவறுகள் நிகழ்ந்ததாகவும், இப்போது அதேபோன்ற ஆத்திரத்தின் பிடியில் இஸ்ரேல் சிக்கக்கூடாது என்றும் கூறினார்.
அதோடு, காஸா பகுதிக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை அனுப்ப எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி ஏற்றுக்கொண்டதாக பைடன் கூறியிருக்கிறார். BBC
Post a Comment