Header Ads



தமிழ்நாட்டில் இலங்கை விரிவுரையாளர் முதலிடம்


 யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றும் Dr. நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S), 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பட்டமேற்படிப்பு (MD) குழந்தை மருத்துவத்துறையில் கற்று பரீட்சையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இவர் தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற MD பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற தகுதி பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.


மேலும், இதுவரையில் சித்த மருத்துவத்தில் குழந்தை மருத்துவத் துறையில் இலங்கையிலிருந்து சென்று பட்டமேற்படிப்பை முடித்து வந்த 2 அவது மருத்துவர் என்பதும், வரலாற்றில் இலங்கையையிலிருந்து சென்று தங்கப் பதக்கத்தைப் பெற்ற முதல் மருத்துவராகவும் இவர் காணப்படுகிறார்.


இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்பிலும் இறுதி ஆண்டில் முதல் தரத்தில் சித்தியெய்து முதலிடம் பெற்று பல்கலைக் கழகத்தின் சிறப்பு விருதுகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.